முதலமைச்சர் பதவியை ஒருபோதும் விரும்பியதில்லை: ரஜினி பரபரப்பு

சென்னை.மார்ச்.12

 முதலமைச்சர் பதவியை ஒருபோதும் தான் விரும்பியதில்லை என்றும் கட்சிக்கு ஒரு தலைமையும் ஆட்சிக்கு ஒருதலைமையும் இருந்தால் தான் அரசியல் மாற்றத்தை கொடுக்க முடியும் என்று நடிகர் ரஜினிகாந்த்  தெரிவித்துள்ளார்.

 சென்னை லீலா பேலசில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, அரசியல்  மாற்றத்துக்கு மூன்று திட்டங்களை வைத்துள்ளேன். முதலாவதாக  தேவையான அளவு மட்டுமே கட்சி நிர்வாகிகள் இருக்க வேண்டும். கட்சியை சிலர் தொழிலாக நடத்துவதால்தான் முறைகேடுகள் நடைபெறுகிறது.

இரண்டாவது இளைஞர்களுக்கு  கட்சியில் அதிக அளவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் .

 மூன்றாவதாக கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதுதான் மிக முக்கியமான திட்டத்தை வைத்துள்ளேன். முதலமைச்சர் பதவியை ஒரு போதும் விரும்பியது இல்லை 1996 ஆம் ஆண்டு மூப்பனார், சோ போன்றவர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வரவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஆனால் நான் அதை ஏற்க வில்லை, நல்ல இளைஞர்கள் தொலை நோக்கு சிந்தனை உள்ள இளைஞர்கள்  நல்லவர்கள் ஆட்சியில் அமரசெய்ய வேண்டும்  அதற்கு பாலமாக செயல்படுவேன் என்று ரஜினி தெரிவித்தார்.

 கட்சியினர் ஆட்சியாளர்களை தொந்தரவு செய்யக்கூடாது ஆனால் தவறுசெய்தால் எதிர்கட்சியினர் போல் தட்டி கேட்க வேண்டும் என்றும் கட்சித் தலைமை கொடுக்கும் ஆலோசனைகளை செயல்படுத்துவது ஆட்சியாளர்கள் கடமை என்று ரஜினி கூறினார்.  மாற்றம் என்பது படித்தவர்கள் இளைஞர்கள் நல்லவர்கள் 50 வயதுக்கு உட்பட்டவர்கள்  அரசியலில் ஈடுபட்டால் தான் ஏற்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *