கொரோனாவிற்கு ஒருவர் பலி ? நாடு முழுவதும் 62 பேர் பாதிப்பு

டெல்லி.மார்ச்.11

நாடுமுழுவதும் 62 பேருக்கு   கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா தொடங்கி இத்தாலி, அமெரிக்கா, ஈரான் என உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், பலர் உயிரிழந்து வரும் நிலையில், நோய் தொற்று அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவந்த கர்நாடகாவை சேர்ந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ்’ உலகின் 100 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதுவரை  உலக அளவில் 4,295 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையிர் இந்தியாவில் பரவிய கொரோனாவை தடுக்க மத்திய, மாநில சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக கேரளாவை சேர்ந்த 8 பேர், ராஜஸ்தான் மற்றும் டில்லியில் தலா ஒருவர் என 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட கர்நாடகாவை சேர்ந்த முதியவர் இன்று உயிரிழந்துள்ளார். இது குறித்து கர்நாடகா அரசு சார்பில் வெளியான செய்தி குறிப்பில், சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய கர்நாடகா மாநிலம் கல்புர்கியை சேர்ந்த முகமது உசைன் சித்திக், என்ற 76 வயது முதியவருக்கு, கொரோனா அறிகுறி தென்பட்டது. ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த அவரின் சளி, ரத்த மாதிரிகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில், இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *