போக்குவரத்துத் துறைக்கு ரூ.1, 600 கோடி கடனுதவி

சென்னை, செப்டம்பர்-27

2,213 புதிய பிஎஸ்-6 தரத்திலான பேருந்துகளும், 500 மின்சாரப் பேருந்துகளும் வாங்க, தமிழக போக்குவரத்துத் துறைக்கு, ஜெர்மன் வளர்ச்சி வங்கி ஆயிரத்து 580 கோடி ரூபாய் கடனுதவி அளிக்கிறது.

லண்டனை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சி-40 என்கிற பன்னாட்டு முகமைக்கும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறைக்கும் கடந்த ஆண்டு மார்ச்சில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்காக, ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் கடனுதவியுடன், 5,890 கோடி ரூபாய் செலவில் 12,000 புதிய பிஎஸ்-6 தரத்திலான பேருந்துகளையும், 2,000 மின்சாரப் பேருந்துகளையும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

முதல்கட்டமாக 1,580 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிஎஸ்-6 தரத்திலான 2,213 புதிய பேருந்துகளும், 500 மின்சாரப் பேருந்துகள் வாங்குவதற்கான திட்ட ஒப்பந்தம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் கையெழுத்தானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *