சட்டப்பேரவை அருகே தர்ணாவில் ஈடுபட்ட தமிமுன் அன்சாரி கைது

சென்னை.மார்ச்.10

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றததை கண்டித்து சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியே தர்ணா போரட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி கைது செய்யப்பட்டார்.

என்.பி.ஆர் என்.சி.ஆர் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்  கொண்டுவர வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கோரிக்கை வைத்தார். தீர்மானம் நிறைவேற்றப்படாததை அடுத்து அவர், சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய   தமிமுன் அன்சாரி, இது ஒரு சமூகத்திற்கு மட்டுமே நடக்கும் பாதிப்பல்ல. பீகாரில் பாஜக கூட்டணியில் உள்ள அரசு என்பிஆர்க்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில்  நீங்கள் ஏன் கொண்டு வர மறுக்கிறீர்கள். பீகார் அரசுக்கு உள்ள துணிச்சல் தமிழக அரசுக்கு இல்லையா என்ற கேள்விக்கு துணை முதலமைச்சர் ஓபிஎஸ், என்பிஆரால் யாருக்கும் பாதிப்பில்லை என பதிலளித்தார். அது அவரது நல்லெண்ணத்தின் அடிப்படையினாலான பதில். அஸ்ஸாமில் பாதிக்கப்பட்டவர்களில் இந்துக்களும் உள்ளனர். எனவே இதற்கு எதிராக தீர்மானம் வேண்டும் என்பதை வலியுறுத்தி   தர்ணாவில் ஈடுபட்டேன். ஆனால் காவல்துறையினர்  கைது செய்துள்ளதாக தமிமுன் அன்சாரி  கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *