புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம்? கிரண்பேடிக்கு எதிரான உத்தரவு ரத்து

சென்னை.மார்ச்.11


புதுச்சேரி அரசின் பணிகளில் தலையிட துணை நிலை ஆளுநர் அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்து.


புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமிக்கும், துணை முதலமைச்சர் கிரண்பேடிக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் அரசு சார்ந்த அன்றாட பணிகளில் கிரண்பேடி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தலையிட்டு வருவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து, மத்திய அரசு மற்றும் துணை ஆளுநர் கிரண்பேடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்ற விசாரித்த நீதிபதி ஏ.பி.சாஹி மநீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் துணைநிலை ஆளுநர் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட் அரசும் கூட்டாட்சி தத்துவத்தின்படி ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று தெரிவித்தனர். அரசுக்கே அதிகாரம் என்ற தனி நீதிபதி தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே முழு அதிகாரம் இல்லை, ஆளுநர் மற்றும் அரசுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டால் மத்திய அரசு தலையிட்டு சமரசம் செய்ய வேண்டும் என்று நிதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *