என்.பி.ஆருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரவேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை.மார்ச்.11

சட்டப்பேரவையில் இன்று என்.பி.ஆர் தொடர்பான கவன ஈர்ப்பு  தீர்மானத்தை  எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து பேசினர்.  அப்போது என்.பி.ஆர் சட்டம்   சிறுபான்மை மக்களுக்கு அச்சத்தை ஏறபடுத்துவதாக உள்ளது. இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜக கூட்டணி கட்சிகள் கூட என்.பி.ஆர் சட்டத்தை எதிர்த்து வருகின்றனர். பீகாரில் நிதிஷ்குமார் அரசு என்.பி.ஆரை அமல்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. வண்ணாரப்பேட்டையில்  போராடி வரும் இஸ்லாமிய மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். ஏப்ரல் 1ந் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட உள்ளது. எனவே சட்டமன்றத்தில் என்.பி. ஆர் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என  தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் என்.பி.ஆர். சட்டம் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது. இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக அரசு 30 ஆண்டுகளாக பாதுகாப்பு அளித்து வருகிறது. முதலமைச்சர்  என்.பி.ஆரில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இஸ்லாமிய மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை வண்ணாரப்பேட்டையில் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

 பின்னர் பேசிய ஸ்டாலின், காங்கிரஸ் ஆட்சியில் 2010 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட  என்.பி.ஆர்  சட்டத்தில் கெடுபிடியான கேள்விகள் இல்லை பிறப்பு சான்றுகள் கேட்கபடவில்லை எனக்கே பிறப்பு சான்று இல்லை என்றார்.  மேலும் அது மக்கள் தொகை கணக்கெடுப்பை மட்டுமே குறிப்பதாக இருந்தது ஆனால் தற்போதைய என்.பி.ஆர் என்.சி.ஆரை பின்பற்றுவதாக உள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *