மார்ச் 27முதல் புதிய படங்களை வெளியிட முடியாது : டி.ராஜேந்தர்

சென்னை.மார்ச்.10

வரும் 27ந் தேதி முதல் புதிய திரைப்படங்கள் எதையும்  விநியோகம் செய்யப் போவதில்லை என திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட  விநியோஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

 சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகித்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு விதிக்கப்படும் 10% டிடிஎஸ் வரியை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும் என்றும், இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக, வரும் மார்ச் மாதம் 27ம் தேதி முதல் எந்த விநியோகஸ்தரும் படங்களை விநியோகிப்பதில்லை என்று ஒரு மனதாக முடிவேடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட  விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் மன்னன், கோவை மாவட்ட திரைப்பட  விநியோஸ்தர்கள் சங்க தலைவர் ராஜமன்னார், திருநெல்வேலி மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க உப தலைவர் திரு. பிரதாப் ராஜா, மதுரை மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் சாகுல் அமித் மற்றும் தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *