தங்கம் விலை பவுனுக்கு ரூ.264 அதிகரிப்பு

சென்னை.மார்ச்.10

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள் தேவை குறைந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தும் தங்கம் விலை அதிகரித்தும் வருகிறது.

வளைகுடா போருக்குப் பின்னர் கடந்த 29 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை மிகவும் சரிவடைந்துள்ளது.  இதன் எதிரொலியாக அமெரிக்கப் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது.

இதனால் தங்கத்தில்  அதிகஅளவில் முதலீடு செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.33,712 க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4,214 க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.50.30 ஆகவும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.50,300க்கு விற்பனை செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *