ரஜினி மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி செய்து நீதி மன்றம் ஆணை

சென்னை மார்ச்.10

பெரியார் குறித்து அவதூறு பேசியதாக  நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை, எழும்பூர் நீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினி, சென்னையில் நடந்த, ‘துக்ளக்’ இதழின், 50வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, 1971ல், தி.க., தலைவராக இருந்த, பெரியார் நடத்திய பேரணி குறித்து, சில கருத்துகளை தெரிவித்தார். இதையடுத்து, ரஜினி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திராவிடர் விடுதலை கழக நிர்வாகி, உமாபதி என்பவர், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், காவல் துறையர் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்தார்.


அதைத் தொடர்ந்து, ரஜினி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு,  திங்கள் கிழமை நீதிபதி, ரோஸ்லின் துரை முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, ரஜினி தரப்பில் ஆஜரான, உயர் நீதிமன்ற வழக்குரைஞர், வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இல்லை,” என, வாதாடினார். இதற்கு, உமாபதி தரப்பு வழக்குரைஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய, முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து, இன்று உத்தரவிடுவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில்  இன்று   ரஜினிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரும் மனுவை தள்ளுபடி  செய்து உத்தரவிட்டார். பெரியார் குறித்து அவதூறு பேசியதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்தார்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *