கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை.மார்ச்.10

கேரளாவில்  பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவைதை அடுத்து  தமிழகத்தில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என   பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

கேரளத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பறவைக் காய்ச்சலும் பரவி வருவதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்!

கேரளத்திலிருந்து வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளித்து சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும். பறவைக் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து ஊடகங்கள் வழியாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில் மது அருந்துவதால் கொரோனா வைரஸ் குறையும் என்பது அபத்தம் என உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளதை குறிப்பிட்டுள்ளார். கொரோனாவுக்கான மருத்துவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்பாமல், பரப்பாமல் மருத்துவர்களின் ஆலோசனைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *