மாநிலங்களவை தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள்12ந் தேதி வேட்பு மனு தாக்கல்

சென்னை.மார்ச்.10

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் மு.தம்பிதுரை, கேபி முனுசாமி மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் ஆகியோர் நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

மாநிலங்களவையில் காலியாக உள்ள  உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வருகிற 26-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. தமிழ்நாட்டில் இருந்து தி.மு.க. சார்பில் 3 பேரும், அ.தி.மு.க. சார்பில் 3 பேரும் போட்டியிடுகிறார்கள். தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் நேற்று தலைமைச் செயலகத்தில் வேட்புமனுதாக்கல் செய்தனர்.

அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் வருகிற 12-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள். வேட்புமனு தாக்கல் செய்ய 13-ந்தேதி கடைசி நாளாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *