ரஜினியுடன் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு

சென்னை.மார்ச்.10

நடிகர் ரஜினிகாந்தை காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் இன்று சந்தித்து பேசினார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை திருநாவுக்கரசர் இன்று காலை சந்தித்து பேசினார். ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் நேற்று சந்தித்துப் பேசினார்.  இந்த சந்திப்பு குறித்து  செய்தியாளர்களிடம் பேசிய செ.கு.தமிழரசன் ரஜினி மக்களுக்காக பணியாற்றுவதில் உறுதியாக இருப்பதாக கூறினார்.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருநாவுக்கரசர் இன்று காலை ரஜினியை சந்தித்தார். நடப்பு அரசியல், 2021 சட்டமன்றத் தேர்தல் எப்படி இருக்கும், கூட்டணிகள் எப்படி அமையும் உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து இருவரும் பேசியதாக தெரிகிறது.

ரஜினியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், இன்று எனது பேரன் சே‌ஷசாயிக்கு முதல் பிறந்தநாள். ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற மகன், மருமகள், பேரன் ஆகியோருடன் வந்து அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம். ரஜினிகாந்த் யாரிடத்திலும் ஆலோசனை பெற வேண்டிய அவசியத்தில் இருப்பதாக நான் கருதவில்லை.

சினிமா அனுபவம், அரசியல் அனுபவம், பொதுவாழ்க்கை அனுபவம் எல்லாம் அவருக்கு இருக்கிறது. நான் ஆலோசனை சொல்லியாகவேண்டும் என்ற கட்டாயம் அவருக்கு கிடையாது. எனவே நான் எந்த ஆலோசனையும் அவருக்கு சொல்லவில்லை என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *