ம.பி. காங்.,எம்.எல்.ஏக்கள் 19 பேர் பதவி விலகல் : கவிழும் கை…மலரும் தாமரை…

டெல்லி.மார்ச்.10

மத்தியபிரதேசத்தில்  அடுத்தடுத்த அரசியல் திருப்பங்கள்  ஏற்பட்டுவரும் நிலையில்  காங்கிரஸ் கட்சியின் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி உள்ளனர். இதனால் அங்கு முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை உருவாகி உள்ளது.

230 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 114 உறுப்பினர்களும் பாஜகவிற்கு 107 உறுப்பினர்களும் உள்ளனர்.  இதில் சுயேட்சைகள் 4 ,பகுஜன் சமாஜ் 1, சமாஜ்வாதி 1  என 120 சட்டமன்ற உறுப்பினர்களின்   ஆதரவுடன் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு  ஆட்சி செய்துவருகிறது.  முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் பதவி  தொடர்பாக கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா இடையே மோதல் போக்கு உருவானது. இதனால் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் அதிருப்தியில் இருந்தனர்.

அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் நேற்று பெங்களூரு சென்று  அங்கு  ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.இதையடுத்து ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களை சமரச படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைமை ஈடுபட்டது.

இந்தநிலையில்  ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியிலிருந்து  விலகுவதாக கூறி  சோனியா காந்திக்கு  தனது பதவி விலகல் கடிதத்தை இன்று   அனுப்பி வைத்தார்.

பின்னர் பிரதமர் மோடியை ஜோதிராதித்ய சந்தியா சந்தித்து பேசினார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அப்போது உடன் இருந்தார். இதனால் அவர் பாஜகவில் இணைவது உறுதி ஆகி உள்ளது..

பதவி விலகிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்

இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தைச் சேரந்த ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் பதவி விலகி உள்ளனர். இதனால் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஆக குறைந்துள்ளதோடு பெரும்பான்மையையும் இழந்துள்ளது. இதனையடுத்து 107 சட்ட மன்ற உறுப்பினர்களை கொண்ட பாஜக ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *