காங்கிரசிலிருந்து விலகியது ஏன்? ஜோதிராதித்ய சிந்தியா பரபரப்பு தகவல்

டெல்லி.மார்ச்.9

மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் கமல்நாத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிருப்தியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா இன்று காங்கிரசிலிருந்து விலகி பாஜக.வில் இணைந்துள்ளார்.

பிரதமர் மோடியிடன் சந்திப்பு

மத்தியபிரதேச காங்கிரஸ் அரசு மீது அதிருப்தியில் இருந்துவந்த ஜோதிராதித்யா சிந்தியா,தனது ஆதரவாளர்களுடன் டெல்லியில் இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ஆகியோரை சந்தித்து பேசியது  பரபரப்பை ஏற்படுத்தியது.

பெங்களூருவில் ம.பி எம்.எல்.ஏக்கள்


காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான அமைச்சரவையில்  இ ருந்து 6 அமைச்சர்கள், 10 எம்.எல்.ஏ.,க்கள் என 16 பேர், மூன்று சிறப்பு விமானம் மூலம், பெங்களூருவுக்கு சென்றனர். பலத்த பாதுகாப்புடன், தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் அவ்ரகள் தங்க வைக்கப்பட்டுனர். இதனையடுத்து கமல்நாத் மற்றும்  டெல்லியில் உள்ள காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித சமரசமும் ஏற்படவில்லை.இந்த நிலையில் பிரதமர் இல்லத்திற்கு தனது ஆதரவாளர்கைளுடன் சென்ற  ஜோதிராதித்யா சிந்தியா பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

காங்கிரசில் இருந்து விலகல்

இதனிடையே ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரசில் இருந்து விலகுவதாக தனது கடிதத்தை காங்., சோனியாகாந்திக்கு அனுப்பி உள்ளார். கடிததத்தில், 18 ஆண்டுகாலம் இருந்த காங்கிரஸ கட்சியில் இருந்து வெளியேற தகுந்த நேரம் வந்து விட்டது. மக்கள் சேவையாற்ற விரும்பினேன், ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து செய்ய முடியவில்லை. மக்கள், தொண்டர்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் எனது புதிய பயணத்தை துவக்க உள்ளேன் என   அவர் கூறி உள்ளார்.

பிரதமர்  மோடியுடன் சந்திப்பு, காங்கிரசிலிருந்து விலகல் என ஜோதிராதித்யா சிந்தியாவின் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்கள்  அவர் பாஜகவில் இணைவார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

இதனிடையே மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க  சதி செய்து வருவதாக காங்கிர மூத்த நிர்வாகி திக்விஜயசிங் குற்றம்சாட்டி உள்ளார்.

பாஜக ஆட்சி?
மத்தியபிரதேசத்தை பொறுத்தவரை மொத்தம் 230 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 116 பேர் பெரும்பான்மை இருந்தால் ஆட்சி அமைக்க முடியும். தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சியில் 114 எம்எல்ஏ.,க்கள் சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கட்சியினர் 2 பேர் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சி நடைபெறுகிறது.

பா.ஜ.க வில் 107 எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். தற்போது காங்கிரஸ் அதிருப்தியில் உள்ள 24 பேர் ஆதரவு அளித்தால் இங்கு பா.ஜ.க ஆட்சி அமையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *