டி.ஆர்.பி. போட்டி தேர்வுகள் தொடக்கம்

செப்டம்பர்-27

தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 144 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் டிஆர்.பி. போட்டித் தேர்வுகள் இன்று தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறும்.

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 இடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி வெளியிட்டது. 8 திருநங்கைகள் உட்பட மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரம் பட்டதாரிகள் தேர்வு எழுத விண்ணபித்து இருந்த நிலையில், இதற்கான தேர்வு இன்று தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்காக தமிழகத்தில் 154 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதன்முறையாக இந்த தேர்வு கணினி வழி நடத்தப்படுகிறது. மொத்தம் 17 பாடங்களுக்கு காலை மற்றும் மாலை என இரு அமர்வுகளாக நடைபெறுகிறது. முறைகேடுகளை தவிர்க்க தேர்வு அறைகள் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெருவிரல் ரேகை வைதத பிறகு தான் தேர்வர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். பெண்கள் தோடு, வளையல், கொலுசும், ஆண்கள் முழுக்கை சட்டை அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *