ஈரானில் இருந்து முதல்கட்டமாக 58 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர்

டெல்லி.மார்ச்.10

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஈரானில் தவித்த வந்த  இந்தியர்கள் 58 பேர் தனி விமானம் மூலம் காசியாபாத் அழைத்து வரப்பட்டனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது, கொரோனா வைரஸ் பாதித்த சுமார் 4 ஆயிரம் உயிரிழந்துள்ளனர். சீனா, இத்தாலியை தொடர்ந்து ஈரானும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 7 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். ஈரானில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அங்கு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், அவர்களை மீட்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து, மத்திய வெளியுறவு அமைச்சகம், இந்தியர்களை மீட்பதற்காக, உத்தரப்பிரதேச மாநிலம் ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து சி17 என்ற விமானம் நேற்று ஈரான் புறப்பட்டது அதில், மருத்துவ குழுவினரும் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து முதல்கட்டமாக, ஈரானில் இருந்து  58 இந்தியர்களுடன் டெஹ்ரானில் இருந்து கிளம்பிய, விமானம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. பின்னர் விமானத்திலி அழைத்து வரப்பட்ட அனைவரும்  மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பபடுவர். ஈரானில் உள்ள எஞ்சிய இந்தியர்களும் விரைவில் மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *