கோடைகாலத்தில் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு வராது : அமைச்சர் வேலுமணி

 

சென்னை.மார்ச்.10

கோடைகாலத்தில் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு  ஏற்படாது  என்று தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னை கண்ணகி நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சுவர்களில்   சென்னை மாநகராட்சி மற்றும் ஸ்டார்ட் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து வண்ண ஓவியங்களை வரைந்து வருகின்றன. சர்வதேச கலைஞர்களை கொண்டு இந்த நவீன ஓவியங்கள் வரையப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக  கண்ணகி கலை மாவட்டம் ஓவிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை  உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழகம் முழுவதும் வண்ண ஓவியங்கள் வரைவதற்காக தொண்டு நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், சாலைகளில் அதிகம் மழை நீர் தேங்காத பகுதியாக சென்னை மாற்றப்பட்டுள்ளதாகவும், வரும் கோடைகாலத்தில் சென்னையில் தண்ணீர் பிரச்னை இருக்காது என்றும் கூறினார். ஆந்திர முதலமைச்சரை சந்தித்து நீரை பெற நடவடிக்கைகள் எடுத்துள்ளதோடு, நீர் உற்பத்தி திட்டங்களையும் அதிகம் செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *