விக்ரம் லேண்டரை காணவில்லை-நாசா

செப்டம்பர்-27

சந்திரயானின் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது.

ஜூலை மாதம் 22-ம் தேதி நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 இந்திய விண்வெளி மையத்தால் ஏவப்பட்டது. உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே சந்திரயான் 2 வின் ஒவ்வொரு செயல்பாடுகளும் உண்ணிப்பாக கவனிக்கப்பட்டு கையாளப்பட்டது. விக்ரம் லேண்டர் நிலவில் தரையிரங்குவதற்கும் 2.1 கி.மீ. தொலைவில் அதன் சிக்னல் திடீரென துண்டிக்கப்பட்டது.

விக்ரம் லேண்டரிலிருந்து சிக்னலை பெறுவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், இதுவரை நடந்த செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்திருந்தார். இந்த நிலையில், திட்டமிட்டப்பட்ட ஆயுள் காலமான 14 நாட்களில் லேண்டரின் தகவல் தொடர்பை மீட்க இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இதனிடையே, அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா அனுப்பிய எல்.ஆர்.ஓ என்ற ஆர்பிட்டரும் நிலவின் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. விக்ரம் லேண்டரை கண்டுபிடிப்பதற்காக, நாசாவின் உதவியை இஸ்ரோ கோரியுள்ளது. நாசாவின் எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர் விக்ரம் லேண்டர் தரையிறங்கியிருக்க வேண்டிய இடத்தை கடந்த 17-ம் தேதி புகைப்படம் எடுத்துள்ளது.

அந்த புகைப்படங்களை தற்போது நாசா வெளியிட்டுள்ளது. அதில், விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது. எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர் மாலை நேரம் துவங்கும் சமயத்தில் புகைப்படம் எடுத்ததால், நிழல் மறைந்து இருட்டாக இருக்கும் இடத்தில் ஒருவேளை லேண்டர் இருக்கலாம் எனவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *