ஸ்டைலு ஸ்டைலு தான்.. டிஸ்கவரி நிகழ்ச்சியில் ரஜினி

மார்ச்.9

டிஸ்கவரி தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில்  ரஜினி பங்கேற்றுள்ள காட்சிகள் அடங்கிய இரண்டாவது டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

 ‘மேன் வொ்சஸ் வைல்ட்’ என்ற டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி உலக அளவில் புகழ் பெற்றது. பியா் கிரில்ஸ் என்ற சாகச வீரா்,  விலங்குகள் நிறைந்த வனப்பகுதிகளிலும், தீவுப்பகுதிகளிலும் செய்துவரும் சாகச நிகழ்ச்சிகள் உலக அளவில் ரசிகா்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அண்மையில் இந்த நிகழ்ச்சியில் உலகின் முக்கிய பிரமுகா்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ என்கிற பெயரில் ஒளிபரப்பாகிறது.

 இதில் ரஜினி பங்கேற்கும் நிகழ்ச்சியின் படபிடிப்பு கா்நாடக மாநிலம், மைசூரில் உள்ள பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் நடை பெற்றது. ‘இந்தப் படப்பிடிப்பில் நடிகா் ரஜினிகாந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளா் பியர் கிரில்ஸுடன் இணைந்து பணியாற்றினாா். 

இது ரஜினிகாந்த் பங்கேற்கும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. கே. பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் இந்த நிகழ்ச்சியை வழங்குகிறது.

ஆபத்துகள் நிறைந்த வனப்பகுதிகளில் இயற்கையோடு ஒட்டி உயிா் வாழும் முறைகளை உணா்த்தும் வகையில் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளாா். குறிப்பாக நீா்வளப் பாதுகாப்பு பற்றிய இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் அடா்ந்த காடுகளில் பயணம் செய்வது, சிறுவா்களுடன் சந்திப்பு என பல சுவாரஸ்ய பகுதிகள் இடம் பெற்றுள்ளன. மார்ச் 23 அன்று, இரவு 8 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்கான விளம்பரத்தைத் தொடங்கியுள்ளது டிஸ்கவரி தொலைக்காட்சி. தற்போது 2-வது டீசரை  வெளியிட்டுள்ளது. இதில் ரஜினி ஸ்டைலாக கண்ணாடி அணிவது ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *