60 வயதில் திருமணம் செய்த காங்கிரஸ் தலைவர் முகுல் வாஸ்னிக்

டெல்லி.மார்ச்.9

காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், தனது  நீண்டகால தோழியான ரவீனா குரானாவை  திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் 60 வயது புதுமண தம்பதிகள் என்பது சுவாராஸ்யம் ஆகும்.

 காங்கிரஸ் பொதுச்செயலாளரும்  முன்னான் மத்திய அமைச்சருமான முகுல் வாஸ்னிக்கும், ரவீனா குரானாவும் நீண்டகால நண்பர்கள் ஆவர்.

  இந்நிலையில் இவர்கள் இருவரும் மணவாழ்க்கையில் இணைந்துள்ளனர். டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர உணவு விடுதியில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *