ரஜினி முதல்வராவது காலத்தின் கட்டாயம்…

சென்னை, செப்டம்பர்-27

நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் ஆவது காலத்தின் கட்டாயம் என சென்னையின் முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள சி.பா. ஆதித்தனார் சிலைக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாநகர முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகராஜன் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாமல் தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த வெற்றிடத்தை நிரப்ப நடிகர் ரஜினியால் மட்டுமே முடியும் எனவும் கூறினார்.

ரஜினிகாந்த் முதல்வராவது காலத்தின் கட்டாயம், இன்னும் 6 மாதத்தில் அவர் கட்சி தொடங்கி, வருகிற 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் ரஜினிகாந்த் போட்டியிடுவார் எனவும் கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.

2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விழாவில் தமிழகத்தின் முதலமைச்சராக ரஜினிகாந்த் தான் தேசிய கொடியை ஏற்றி வைப்பார் எனவும் கராத்தே தியாகராஜன் சூளுரைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *