இந்தியாவில் 43 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

டெல்லி.மார்ச்.9

நாடு முழுவதும்  43 பேர் கொரோனா வைரஸ்  பாதிப்புக்கு ஆளாகி உள்ளது உறுதி  செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்கியது. இதுவரை  சீனாவில் 2,800 பேர் உயிரிழந்துள்ளனர் உலகம் முழுதும் 3800க்கும் மேற்பட்டோர் கொரோனோ வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது 43 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 16 பேர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆவார்கள்.கேரளா, டெல்லி, ராஜஸ்தான், தெலுங்கானா, ஆக்ரா, காசியாபாத், தமிழ்நாடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில் வசிக்கும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் இத்தாலி சென்று விட்டு  திரும்பிய  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் அவர்களது உறவினர்கள் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜம்மு, டெல்லி. உத்தரபிரதேசம் ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது.
ஈரானில் இருந்து ஜம்மு திரும்பிய  63 வயது பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மத்திய சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவ்குமார் “மொத்தம் 43 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக” தெரிவித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த 3 வயது சிறுமிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.  கொரரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *