நீட் ஆள் மாறாட்ட புகார்: இடைத்தரகர் கைது

செப்டம்பர்-27

நீட் ஆள் மாறாட்ட புகாரில் கேரளாவை சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் என்ற இடைத்தரகரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யாவும் அவரது தந்தை வெங்கடேசனும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் தேனி சி.பி.சி.ஐ.டி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், விசாரணையில் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன், மகனை மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற ஆசையில், மும்பையில் உள்ள பயிற்சி மையத்திற்கு இடைத்தரகர்கள் மூலம் 20 லட்ச ரூபாய் கொடுத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

இதன் அடிப்படையில், கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் என்ற இடைத்தரகரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் மேலும், எத்தனை நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர், இதுபோன்று எத்தனை பேர் ஆள் மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்துள்ளனர் என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *