மாநிலங்களைவைத் தேர்தல்: கே.பி.முனுசாமி,மு.தம்பிதுரை,ஜி.கே.வாசன் அதிமுக வேட்பாளர்களாக அறிவிப்பு

மாநிலங்களைவையில் காலியாக உள்ள 55 இடங்களுக்கு மார்ச் 26ம்  தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திலிருந்து 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில் அதிமுக  சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி ,கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக தற்போது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *