சொகுசு கப்பலில் தவிக்கும் 17 தமிழர்களை உடனடியாக மீட்கவேண்டும்: டாக்டர் ராமதாஸ்

சென்னை.மார்ச்.9

 கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக எகிப்து நாட்டின் நைல் நதிக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் தவிக்கும் தமிழகப் பயணிகள் 17 பேரை உடனடியாக மீட்கவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்    வலியுறுத்தி உள்ளார்.

 இது குறித்து  இன்று  வெளியிட்டுள்ள  டுவிட்டர் பதிவில்,

எகிப்து நாட்டின் லக்ஸர் நகர் அருகே நைல் ஆற்றில் கொரோனா அச்சம் காரணமாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசுக்கப்பலில் தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த 17 பயணிகளும் உடனடியாக மீட்கப்பட வேண்டும். அதுவரை அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்!

எகிப்தில் சொகுசுக் கப்பலில் பயணித்து, கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் அலெக்ஸான்டிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சென்னையைச் சேர்ந்த பொறியாளருக்கு சிறப்பான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். கப்பலில் தவிக்கும் தமிழக பயணிகளின் அச்சம் போக்கப்பட வேண்டும்  இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *