மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு சபாநாயகர் தனபால் புகழாரம்

 சென்னை.மார்ச்.9

இன்றைய சட்டப்பேரவை  கூட்டத்தில், மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.


பேரவைத் தலைவர் தனபால் பேசுகையில்,’அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்படபல்வேறு முக்கிய பொறுப்புகளை திறம்பட வகித்தவர் பேராசிரியர் அன்பழகன்.

பேராசிரியர் க.அன்பழகன், மொழி உரிமைக்காகப் போராடியவர்; ஜனநாயக முறைப்படி பேரவை நடைபெற உதவியவர். எதிர்க்கட்சிகளும் ஏற்கத்தக்க வகையில் ஆணித்தரமாக வாதங்களை முன்வைத்து பேசியவர் க.அன்பழகன்.அவை முனைவர், மக்கள் நல்வாழ்வுத் துறை, கல்வி மற்றும் நிதி அமைச்சராக திறம்பட பணியாற்றியவர் க.அன்பழகன். என்றும் எளிமை, அடக்கம் என்று எளிமையாக வாழ்ந்தவர் அன்பழகன். பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறது.’ எனத் தெரிவித்தார். பின்னர் மறைந்த சட்டமன்ற உறுப்பினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்றைய பேரவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டது. 2 நிமிட மவுன அஞ்சலிக்கு பின் தமிழக சட்டப்பேரவை மார்ச் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *