அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய சிறுவனுக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

சென்னை.மார்ச்.9

சென்னையில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட  சிறுவன் உட்பட இரண்டு பேருக்கும் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருவரது ரத்த மாதிரிகளும் சென்னை கிங் ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ரத்த பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பிய 15 வயது சிறுவன் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

இதையடுத்து, அவா் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அதேபோன்று நேபாளத்திலிருந்து வந்த ரயில்வே அலுவலா் ஒருவருக்கும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால், அவா், பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதற்கு நடுவே, கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட காஞ்சிபுரத்தைச் சோ்ந்த பொறியாளர் மனைவியையும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் வைத்து,அவருடைய ரத்த மாதிரியும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதில், பொறியாளரின் மனைவிக்கும், அமெரிக்காவில் இருந்து வந்த சிறுவனுக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பது ரத்தப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *