கொரோன வைரஸ் : முதலமைச்சர் பழனிசாமி அவசர ஆலோசனை

 

சென்னை.மார்ச்.9

தமிழகத்தில் கொரோன வைரஸ்  முன்னெச்சரிக்கை நடிவடிக்கை குறித்து முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

 இந்நிலையில்  மலேசியாவிலிருந்து கோவை வந்த சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்    சென்னையில் உள்ள தமிழக அரசு தலைமைச்செயலகத்தில்  அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், சுகாதாரத் துறை  அமைச்சர் விஜயபாஸகர்,சுகாதாரத் துறை செயலல் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க எடுத்திருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் விளக்கம் அளித்தார்.

மேலும், விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மாநிலம் முழுவதும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் முதலமைச்சர் பழனிசாமி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அனைத்துத் துறை அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் ஒன்றிணைந்து பணியாற்றி, கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் அறிவுறுத்தினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *