சட்டப்பேரவையில் அன்பழகன் மறைவுக்கு இரங்கல்

 சென்னை.மார்ச்.9

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கியது. பேரவை தொடங்கியதும், மறைந்த திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான க.அன்பழகன் மற்றும் உறுப்பினகளின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரன் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டதை தொடர்ந்து, மறைந்த முன்னாள் அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான க. அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும் மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.பி. சாமி, காத்தவராயன் ஆகியோருக்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்ட பின்னர் சட்டப்பேரவை புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று காலை தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு அடுத்த மாதம் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற உள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தாக்கல் செய்தாா். அதன் பிறகு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் 4 நாள்கள் நடைபெற்று, கூட்டத் தொடா் ஒத்திவைக்கப்பட்டது.

ட்டுள்ளன. அதுபோல, தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு தமிழகத்தில் நடத்தக் கூடாது என வலியுறுத்தவும் எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *