மேற்குவங்கத்தில் மம்தா அரசை வீழ்த்தி ஆட்சி அமைப்போம்: பாஜ.க தேசிய பொதுச்செயலர் ராம் மாதவ்

கொல்கத்தா.மார்ச்சு.9

2021 மேற்குவங்க சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் மம்தாபானர்ஜி தலைமையிலான திரிணாமல் கட்சியை தோற்கடித்து பாஜக ஆட்சியமைக்கும் என அக்கட்சியின் தேசிய பொதுச்செயலர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.


மேற்குவங்கத்தில் அடுத்தாண்டு இறுதியில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ், 2021ம் ஆண்டு நடக்கும் மேற்குவங்க சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசை தோற்கடித்து பாஜ., அரசு அமையும். அங்கு, பாஜக கட்சியை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மூத்த தலைவர்கள் கூடுதல் கவனம் செலுத்த உள்ளனர்.

அதேபோல் அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்.  அணைமையில் திப்ருகரில்  பாஜக நடத்திய பேரணியால், பொது மக்கள் மனதில் குடியுரிமை திருத்த சட்டம்  குறித்த குழப்பம்  அகன்று தெளிவு ஏற்பட்டுள்ளதாக ராம் மாதவ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *