க.அன்பழகன் மறைவு: துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர் ஜெயக்குமார் நேரில் அஞ்சலி

சென்னை, மார்ச்-07

திமுக பொதுச்செயலாளரும், முதுபெரும் திராவிட இயக்க தலைவருமான பேராசிரியர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள அன்பழகன் உடலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *