மகளிர் தின சலுகை: நாடு முழுவதும் உள்ள புராதான இடங்களில் பெண்களுக்கு அனுமதி இலவசம்-மத்திய அரசு

டெல்லி, மார்ச்-07

நாடு முழுவதும் உள்ள புராதன சுற்றுலா தளங்களை நாளை பெண்கள் இலவசமாக பார்க்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை பார்க்க மகளிர் தினத்தையொட்டி கலாச்சாரத்துறை அமைச்சகம் இந்த சலுகையை அறிவித்துள்ளது.

சர்வதேச மகளிர் தினம் (மார்ச் 8-ந்தேதி) நாடு முழுவதும் நாளை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் மகளிர் தின வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பெண்களின் தியாகத்தை போற்றும் விதமாக நாடு முழுவதும் உள்ள புராதன இடங்களை நாளை பெண்கள் இலவசமாக சென்று பார்க்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 142 புராதன இடங்களை இலவசமாக பார்வையிட முதல் முறையாக பெண்களுக்கு மத்திய அரசு வழங்கப்பட்டுள்ளது. இந்த புராதன இடங்களில் உலகின் 7-வது அதிசயமான தாஜ்மஹாலும் அடங்கும்.

இந்த அறிவிப்பை உறுதி செய்யும் வகையில் ஆக்ராவைச் சேர்ந்த தொல்லியல் துறை ஆய்வாளர் வசந்த் ஸ்வரங்கர் கூறுகையில், ‘ஆக்ராவில் உள்ள மூன்று உலக பாரம்பரிய தளங்கள் உட்பட 8 புராதன இடங்களை வெளிநாட்டினர் உட்பட அனைத்து பெண்களும் கட்டணமின்றி இலவசமாக பார்க்கலாம்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *