ராமர் கோயில் கட்ட ரூ.1 கோடி நன்கொடை-உத்தவ் தாக்கரே அறிவிப்பு

அயோத்தி, மார்ச்-07

பாஜகவை விட்டு தான் பிரிந்துள்ளோம், இந்துத்துவாவை விட்டு பிரியவில்லை என மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே கூறினார்.

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து மகராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அங்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் முதல்வராக பதவியேற்றதால் அவர் செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் முதல்வர் உத்தவ் தாக்கேர இன்று அயோத்தி சென்றார்.

இதையொட்டி ஏராளமான சிவசேனா தொண்டர்களும் சிறப்பு ரயில் மூலம் அயோத்தி சென்றடைந்தனர். இதைத்தொடர்ந்து உத்தவ் தாக்கரே இன்று விமானம் மூலம் அயோத்தி சென்றடைந்தார். அவருக்கு அயோத்தியில் சிவசேனா தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பாஜகவை விட்டு தான் பிரிந்துள்ளோம், இந்துத்துவாவை விட்டு பிரியவில்லை. பா.ஜ.க. என்றால் இந்துத்துவா என அர்த்தமல்ல. ராமரை வழிபடுவதற்காகவே இங்கு வந்தேன். எனது குடும்பத்தினரும் வந்துள்ளனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட எங்கள் அறக்கட்டளையில் இருந்து ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *