பெரியார் குறித்த கருத்து: ரஜினி மீதான வழக்கில் 9-ம் தேதி தீர்ப்பு

சென்னை, மார்ச்-07

பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றம் வரும் 9-ம் தேதி தீர்ப்பளிக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் துக்ளக் இதழ் ஆண்டு விழாவில் பேசிய ரஜினி 1971-ல் திராவிடர் கழக பேரணியில் ராமர், சீதையின் நிர்வாண உருவங்கள் எடுத்து செல்லப்பட்டதாக கருத்து தெரிவித்திருந்தார்.

உண்மைக்கு மாறாக பேசியதாக அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது திராவிடர் கழக பேரணியில் ராமர், சீதை சிலைகள் நிர்வாணமாக கொண்டுசெல்லப்பட்டது தொடர்பாக எந்த புகைப்பட ஆதாரமும் இல்லை என்றும் 50 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம் குறித்து ரஜினி அரசியல் லாபத்திற்காக பேசியதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதி தீர்ப்பை வருகிற 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *