விவசாயிகளுடன் நாற்று நட்டு மகிழ்ந்த முதல்வர் பழனிசாமி!!!

திருவாரூர், மார்ச்-07

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுடன் இணைந்து வயலில் இறங்கி நாற்று நட்டு மகிழ்ந்தார்.

பொங்கல் பண்டிகையின் போது, முதல்வர் பழனிசாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள வயலில் அறுவடை செய்து இறங்கி வேலை பார்த்தார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும், முதல்வர் பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூரில் பாராட்டு விழா நடக்கிறது. இதற்காக திருவாரூர் சென்ற பழனிசாமி, கோயில்வெண்ணியை அடுத்த சித்தமல்லி என்ற கிராமத்தில், கோடை சாகுபடிக்கான நடவுப்பணிகள் நடைபெற்று கொண்டிருந்ததை பார்த்தார்.

நாற்று நட்டுக் கொண்டிருந்த பெண்களிடம் பேசிய அவர், வயலில் இறங்கி நாற்று நட்டார். இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட மற்ற விவசாயிகளும் அவருடன் சேர்ந்து நாற்று நட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *