ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இடம் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர்கள்

சென்னை, செப்டம்பர்-26

அதிமுக வேட்பாளர்கள் இருவரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் நாங்குநேரி தொகுதியில், நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்செல்வனும் போட்டியிடுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு தொகுதி வேட்பாளர்களும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவர்களது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றனர்.

மேலும், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு நன்றியும் தெரிவித்துக்கொண்டனர். இந்த நிகழ்வின்போது அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ராஜலெட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *