க.அன்பழகன் மறைவு: நேரில் சென்று ரஜினிகாந்த் அஞ்சலி

சென்னை, மார்ச்-07

திமுக பொதுச்செயலாளரும், முதுபெரும் திராவிட இயக்க தலைவருமான பேராசிரியர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள அன்பழகன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.

இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவு பேரிழப்பு என்று தெரிவித்தார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *