திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

சென்னை, மார்ச்-07

திமுக பொதுச்செயலாளரும், முதுபெரும் திராவிட இயக்க தலைவருமான பேராசிரியர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இனப்பால், மொழிப்பால், கழகப்பால் என முப்பாலூட்டியை பேராசிரிய பெரியப்பாவை இழந்து நிற்பது மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான திமுகவின் பொதுசெயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திமுக கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள் என கூறியுள்ளார்.

இதேபோன்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் அன்பழகன் அவர்களின் இழப்பு வேதனைக்குரியது. என  தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டு இரங்கல் செய்தியில், திராவிட இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவராக திகழ்ந்த பேராசிரியர் திரு. க. அன்பழகன் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *