பேராசிரியர் க.அன்பழகன் மறைவு-மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் கண்ணீர் மல்க அஞ்சலி

சென்னை, மார்ச்-07

திமுக பொதுச்செயலாளரும், முதுபெரும் திராவிட இயக்க தலைவருமான பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த மாதம் 24-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல் நிலை கடந்த சில நாட்களாக மோசமான நிலையை அடைந்தது.

இந்நிலையில் நேற்றிரவு 1 மணியளவில் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவை அறிந்து திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

அதன்பிறகு அன்பழகன் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு திமுக தலைவர் ஸ்டாலின், ஆ.ராசா, டி.ஆர்.பாலு, எ.வ.வேலூ உள்ளிட்ட திமுகவினர் மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

பிறகு மதிமுக பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ, அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தினருக்கும் தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டார். திமுக எம்பி கனிமொழி, ராஜாத்தியம்மாள் ஆகியோர் அன்பழகன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *