கொரோனா பாதிப்பு எதிரொலி: பள்ளிகளை உடனடியாக மூட உத்தரவு

டெல்லி, மார்ச்-05

டெல்லியில் கொரோனா பாதிப்பு எதிரொலியாக பள்ளிகளை உடனடியாக மூட டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் பாதிக்கபட்ட 3 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு எதிரொலியால் டெல்லியில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு ஆரம்ப பள்ளிகளுக்கும் நாளை முதல் மார்ச் 31 வரை விடுமுறை அறிவித்து டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.  பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்ய தற்காலிக தடை விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *