தமிழகத்தை சேர்ந்த மாணிக்கம் தாகூர் உட்பட காங். எம்.பி.க்கள் 7 பேர் சஸ்பெண்ட்

டெல்லி, மார்ச்-05

காங்கிரஸ் எம்.பிக்கள் 7 பேரை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லா உத்தரவிட்டுள்ளார். அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடந்து வருகிறது. குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என காங். உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் நாள்தோறும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் நடந்த கலவரம் தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், சபாநாயகர் அதனை மறுத்து வந்தார். இதனால், அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் சிலர் பேப்பர்களை எடுத்து சபாநாயகரை நோக்கி வீசினர்.

இதனையடுத்து, அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக தமிழகத்தை சேர்ந்த மாணிக்கம் தாகூர், கவுரவ் கோகாய், பிரதாபன், டீன் குரியகோஷ், பென்னி பெஹானம், ராஜ்மோகன் உன்னிதான் மற்றும் குர்ஜீத் சிங் உள்ளிட்ட 7 எம்.பிக்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இதனால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *