உளவுப்பிரிவு அதிகாரி கொலை வழக்கு: ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் கைது!!!

டெல்லி, மார்ச்-05

டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட உளவு பிரிவு அதிகாரி அங்கித் ஷர்மா வழக்கில் தேடப்பட்டு வந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

வடகிழக்கு டெல்லியில் அண்மையில் சிஏஏ எதிா்ப்பாளா்களுக்கும், ஆதரவாளா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது. இதில் 47 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

வன்முறையின் போது சந்த் பாக் பகுதியில் வசித்து வந்த உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா, சமூக விரோத கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார். 

இதில், அப்பகுதி ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் முக்கிய பங்கு வகித்ததாக அங்கித் ஷர்மாவின் பெற்றோர் உள்பட அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கி ஆம் ஆத்மி நடவடிக்கை எடுத்தது.

மேலும், தலைமறைவாகியிருந்த தாஹிர் உசேனை டெல்லி போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர் இன்று நீதிமன்றத்த்தில் சரணடைந்தார். தொடர்ந்து உசைன் டெல்லி போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *