நாமக்கல் புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்!!!

நாமக்கல், மார்ச்-05

நாமக்கல்லில் 338 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில், நாமக்கல்லில் 338 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, விஜயபாஸ்கர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் ரூ.1167.21 கோடி மதிப்பீட்டில் 8 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.34.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 9 புதிய அரசு கட்டிடங்களை திறந்து வைத்து 33,141 பயனாளிகளுக்கு ரூ.134.37 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரியில் அமையவுள்ள புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *