கிருஷ்ணா நதியில் இருந்து கூடுதல் நீர் திறந்துவிட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

அமராவதி, மார்ச்-05

கிருஷ்ணா நதியிலிருந்து கூடுதலாக தண்ணீரை திறக்க கோரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதத்தை ஆந்திர முதலமைச்சரிடம் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் வழங்கினர்

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று காலை தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் விமானம் மூலம் விஜயவாடா சென்றனர்.

இதையடுத்து, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். கோடை காலத்தில் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கிருஷ்ணா நதியிலிருந்து கூடுதலாக தண்ணீரை திறக்க கோரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதத்தை ஆந்திர முதலமைச்சரிடம் அமைச்சர்கள் வழங்கினர்.

இந்த கோரிக்கை கடிதத்தில் கோதாவரி-காவேரி இணைப்பு திட்டம் தொடர்பாகவும், கிருஷ்ணா நதியிலிருந்து தமிழகத்திற்கு கூடுதலாக 3 டிஎம்சி தண்ணீரை திறப்பது தொடர்பான கோரிக்கையும் முன் வைக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *