மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை-முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?

சென்னை, மார்ச்-05

தமிழகத்தில் 2021ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்துள்ள நடிகர் ரஜினி அதற்கான முன்னேற்பாடாக ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர்களை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மத்திய அரசுக்கு ஆதரவாக பேசி வந்த ரஜினி டெல்லியில் நடந்த வன்முறைக்கு மத்திய உள்துறை அமைச்சகமும், உளவுத்துறை தோல்வியும் தான் காரணம் என காட்டமாக பேட்டி அளித்தார். மேலும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க தயார் என்றும் அறிவித்தார். இதை தொடர்ந்து முஸ்லிம் அமைப்புகள், மத குருமார்களையும் அழைத்து பேசி வருகிறார்.

இதற்கிடையே தனது அரசியல் கட்சி பெயரை அறிவிப்பதற்கான முதற்கட்ட பணிளை ரஜினி துவக்கி உள்ளார். இதன் ஒரு பகுதியாக, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனையில் ஈடுபட்டார். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் 37 மாவட்ட செயலர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *