மகளிர் உலககோப்பை கிரிக்கெட்: இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி!!!

சிட்னி, மார்ச்-05

மகளிர் உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, ‘பி’ பிரிவில் டாப்-2 இடத்தை பெற்ற தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

இந்த நிலையில், சிட்னியில் இன்று முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோத இருந்தன. ஆனால், சிட்னியில் கனமழை பெய்ததால், ஆட்டம் கைவிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால், ஏ பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது இதுதான் முதல் முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *