டெல்லி வன்முறை: நன்கு திட்டமிடப்பட்டவை, ஒருதலைப்பட்சமானது-சிறுபான்மை ஆணையம்

டெல்லி, மார்ச்-04

டெல்லி வன்முறை ஒரு தலைப்பட்சமானது. நன்கு திட்டமிடப்பட்டவை என சிறுபான்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்தியவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக மாறியதில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். 

வடகிழக்கு டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை டெல்லி சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் ஜாபருல் இஸ்லாம் கான் அடங்கிய தூதுக்குழு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது

அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: வடகிழக்கு டெல்லியில் வெடித்த வன்முறை ஒரு தலைப்பட்சமானது. நன்கு திட்டமிடப்பட்டவை. மேலும் கடைகள் மற்றும் வீடுகளுக்கு அதிகபட்ச சேதம் விளைவிக்கும் வகையில் உள்ளூர் மக்களிடமிருந்து ஆதரவை பெற்று நடத்தப்பட்டு உள்ளது.  வன்முறை காரணமாக ஏற்பட்ட சேதத்தின் அளவை கருத்தில் கொண்டு டெல்லி அரசு அறிவித்த இழப்பீடு போதுமானதாக இல்லை.

நாங்கள் சென்ற எல்லா இடங்களிலும் இஸ்லாமிய வீடுகள், கடைகள் மற்றும் பட்டறைகளுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. முஸ்லீம்களுக்கு சொந்தமான ஒரு பயண நிறுவனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஷோரூம் போன்ற கடைகள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. அதே நேரத்தில் இந்துக்கு சொந்தமான கடைகளுக்கு எந்த சேதாரமும் இல்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *