உயர்வுடன் நிறைவடைந்த வர்த்தகம்
செப்டம்பர்-26
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 369 புள்ளிகள் அதிகரித்து உயர்வுடன் இன்றைய வர்த்தம் நிறைவடைந்துள்ளது
பொருளாதாரத்தில் அடுத்தடுத்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை மற்றும் வரி மற்றும் மானிய சலுகைகளினால் பங்குசந்தை நிலவரம் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
இந்த நிலையில், வியாழன் அன்று, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 133 புள்ளிகளும், மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 369 புள்ளிகளும் உயர்ந்துள்ளது. புதன் கிழமையன்று 38593.52 புள்ளிகளில் நிலைபெற்ற சென்செக்ஸ் இன்று வர்த்தக இறுதியில் 39022.95 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 11571.20 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.