இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!!!

டெல்லி, மார்ச்-04

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என சுகாதார துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 981 ஆகவும், தொற்று எண்ணிக்கை 80 ஆயிரத்து 200 ஆகவும் உள்ளது.

இந்தியாவில் டெல்லி மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த தலா ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லி அரசின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் தயாராக இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.  நல்ல தரமான தனிமைப்படுத்தும் வார்டுகளை உருவாக்குமாறு கோரியுள்ளோம்.

16 இத்தாலியர்கள் உட்பட 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறூதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினர்

21 இத்தாலிய நாட்டினரில் 16 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  அவர்கள் சாவ்லாவில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆக்ராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இனிமேல், பட்டியலிட்ட 12 நாடுகளில் மட்டுமல்லாமல், இந்தியா வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஈரான் அரசு எங்கள் முயற்சிகளை ஆதரித்தால், அங்கேயும் ஒரு சோதனை ஆய்வகத்தை நிறுவ வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு உள்ளது. இது ஒரு முழுமையான சோதனைக்கு பிறகு ஈரானில் இருந்து எங்கள் குடிமக்களை திரும்ப அழைத்து வர உதவும் என கூறினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *