ம.பி. அரசியலில் பரபரப்பு: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடத்தல்… குற்றச்சாட்டை மறுக்கும் பா.ஜ.க.

போபால், மார்ச்-04

கர்நாடகாவில் காங்கிரசை கவிழ்த்து பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததை போல் மத்திய பிரதேசத்திலும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கமல்நாத் முதலமைச்சராக உள்ளார். மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. காங். எம்.எல்.ஏ.க்கள் 4 பேரையும், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேரையும் பா.ஜ.க. இழுத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எம்.எல்.ஏ.க்கள் எட்டு பேரும் ஹரியாணாவில் உள்ளா குருகிராம் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் பாஜக எம்எல்ஏ நரோட்டம் மிஸ்ரா ஆகியோர் காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர்களை ரூ.25-35 கோடி பேரம் பேசி ஈர்க்க முயற்சிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜயா சிங் கூறியிருந்தார். இந்த நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்டதாக கூறப்படுவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தாங்கள் கடத்தியதாக கூறும் குற்றச்சாட்டு பொய் என பா.ஜ.க. மறுப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *